உலகம் முழுவதும் இன்று (டிச. 25) கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
A post shared by TVK Vijay (@tvkvijayhq)
“>
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனித குலத்தில் அமைதி, கருணை, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவை தழைத்துச் செழிக்க உயரிய நற்போதனைகளை வழங்கியவர் இயேசு கிறிஸ்து. அகிலமெங்கும் அன்பின் ஒளியாகத் திகழும் அவர் பிறந்த இந்த நன்னநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் பெருவிழா நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சென்னை மகாபலிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பங்கேற்று ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
