மக்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் விலையை அதிரடியாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கலாால் வரி திருத்த மசோதாவை கொண்டு வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் விளைவாக, தற்போது வெறும் 18 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு சிகரெட்டின் விலை, நான்கு மடங்கு உயர்ந்து 72 ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த அதிரடி விலை உயர்வு, சிகரெட் பழக்கத்திற்கு அடிமையானவர்களை அந்தப் பழக்கத்தில் இருந்து மீட்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் அதிக விலை கொடுத்து சிகரெட் வாங்குவதைத் தவிர்க்க இது ஒரு வாய்ப்பாக அமையும். இதைப் பாராட்டி சமூக வலைதளங்களில் பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
