நாட்டின் 24 விமான நிலையங்கள் மூடல்!

Estimated read time 0 min read

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய மாநிலங்களில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் பள்ளி கல்லூரிகள் கால வரையின்றி மூடப்பட்டன. பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இமாச்சல் பிரதேசத்திலும், ராஜஸ்தான் மாநிலத்திலும் குறிப்பிட்ட இடங்களில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு மாநிலங்களில் போலீசார் உட்பட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டு அவர்கள் பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா முழுக்கு குறிப்பிட்ட 24 விமான நிலையங்கள் செயல்படாது என விமானத்துறை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி செயல்படாத விமான நிலையங்கள் பற்றிய விவரங்கள் இதோ…

ஜம்மு காஷ்மீர் :

  • ஜம்மு
  • ஸ்ரீநகர்
  • பூஞ்ச்

லடாக் :

  • லே

பஞ்சாப் :

  • அமிர்தசரஸ்
  • சண்டிகர்
  • லூதியானா
  • பதான்கோட்

இமாச்சல் பிரதேசம் :

  • தர்மசாலா
  • சிம்லா
  • காங்ரா
  • குலு

ராஜஸ்தான் :

  • ஜோத்பூர்
  • உதய்பூர்

குஜராத் :

  • ஜம்நகர்
  • ராஜ்கோட்
  • அகமதாபாத்

உத்திர பிரதேசம் :

  • ஹிண்டன்

மகாராஷ்டிரா :

  • மும்பை
  • புனே

கர்நாடகா :

  • ஷிவமோகா

தமிழ்நாடு :

  • சென்னை (குறிப்பிட்ட சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்)

ஹரியானா :

  • பிவானி

உத்தரகண்ட் :

  • டெஹ்ராடூன்
Please follow and like us:

You May Also Like

More From Author