வர்த்தக தடைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவுடன் தனது நிர்வாகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ட்ரூத் சோஷியலில் இது குறித்த ஒரு பதிவில், வரும் வாரங்களில் பிரதமர் மோடியுடன் பேச ஆவலுடன் இருப்பதாகவும், பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் வெற்றிகரமான முடிவுக்கு வழிவகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
“நமது இரு பெரிய நாடுகளுக்கும் வெற்றிகரமான முடிவுக்கு வருவதில் எந்த சிரமமும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்!” என்று கூறினார்.
SCO உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, ஜி ஜின்பிங் மற்றும் விளாடிமிர் புடினுடனான சந்திப்பைத் தொடர்ந்து, இந்தியாவும், ரஷ்யாவும், சீனாவிடம் “இழந்துவிட்டதாக” வன்மையாக கண்டித்த டிரம்பின் நிலைப்பாடு தற்போது மென்மையான தொனிக்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வர்த்தக தடைகள் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்: டிரம்ப்
