கிருஷ்ணகிரி கே.ஆர்.ஜி அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கே.ஆர்.ஜி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரானது தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் என்பதால், ஆற்றங்கரையோர மக்களுக்கும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ள நிலையில் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலிப்பெருக்கி மூலமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.