இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, திங்கட்கிழமை (ஜனவரி 12) காலை 10:17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவிய பிஎஸ்எல்வி-சி62 ராக்கெட் எதிர்பாராத விதமாகத் தோல்வியில் முடிந்தது.
விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களிலேயே ராக்கெட் தனது பாதையிலிருந்து விலகிச் சென்றதால், அதில் இருந்த 16 செயற்கைக்கோள்களும் விண்வெளியில் தொலைந்து போனதாக அஞ்சப்படுகிறது. ராக்கெட் ஏவப்பட்ட முதல் இரண்டு நிலைகள் வெற்றிகரமாகச் செயல்பட்டன.
ஆனால், மூன்றாவது நிலை செயல்படத் தொடங்கிய போது, ராக்கெட்டின் சுழற்சி விகிதத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு, அது திட்டமிடப்பட்ட பாதையிலிருந்து விலகியது.
சுமார் எட்டு நிமிடங்களுக்குப் பிறகு இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறைக்குக் கிடைத்த தகவல்கள் துண்டிக்கப்பட்டன.
ராக்கெட் சரியான சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தத் தவறிவிட்டதை இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரோவின் பிஎஸ்எல்வி-சி62 திட்டம் தோல்வி
