இந்தியாவின் இண்டிகோ விமான நிறுவனம் 26ஆம் நாளிரவு கொல்கத்தா மற்றும் சீனாவின் குவாங்சோ நகரங்களுக்கிடையே உள்ள நேரடி விமான சேவையை மீண்டும் துவங்கியது. 2020ஆம் ஆண்டு முதல் இதுவரை நிறுத்தப்பட்டிருந்த இந்தியா மற்றும் சீனப் பெருநிலப்பகுதிக்கிடையே உள்ள நேரடி விமானச் சேவை மீண்டும் துவங்கியது இதுவே முதன்முறையாகும்.
அடுத்து வரும் சில மாதங்களுக்குள், புது தில்லி மற்றும் ஷாங்காய், குவாங்சோ நகரங்களுக்கிடையே உள்ள விமானச் சேவையை மீண்டும் துவங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் அறிவித்துள்ளன.
நேரடி விமானச் சேவை மீண்டும் துவங்கியது உலகின் மிக அதிக மக்கள் தொகையையும் மிக விரைவான பொருளாதார வளர்ச்சியையும் கொண்டுள்ள இரு நாடுகளிடையே உள்ள தொடர்பை மேலும் வலுப்படுத்துவதற்கு துணையாக இருக்கும் என்று இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.
