சீனாவின் தைவான் பிரதேசத்தின் தலைவர் லாய்ட்சிங்தே அக்டோபர் 10ஆம் நாள் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் வரலாற்றை திரித்து
பொய்யான கருத்துக்களைக் கூறியதாக ஊடகங்கள் குற்றம் சாட்டின.
வரலாற்றைத் திரித்து கூறுவது, ஆயுத ஆற்றல் மூலம் தைவான்
சுதந்திரத்தை நாடுவது, வெளிநாடுகளைச் சார்ந்திருந்து தைவான் சுதந்திரத்தை நாடுவது
ஆகியவற்றைக் கொண்ட அவரது தவறான கருத்துக்களுக்கு, தைவானில் கண்டன குரல்கள்
எழுந்துள்ளன. அவரது கூற்று, தைவான் நீரிணையின் இரு கரை பிரச்சினையில் மேலும் பெரிய
பகைமை மற்றும் விரோதப்போக்கை உருவாக்கியுள்ளதாக தைவான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தைவான், சீனாவுக்குத் திரும்புவது
என்பது, இரண்டாவது உலகப் போர் வெற்றி பெற்ற சாதனைகள் மற்றும் இரண்டாவது உலக போருக்குப்
பிந்தைய சர்வதேச ஒழுங்கிலுள்ள முக்கிய பகுதியாகும். இது அனைவரும்
அறிந்த ஒன்று.
1971ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐ.நா பொது பேரவையின் 2758வது தீர்மானத்தில், ஒரே சீனா என்ற கோட்பாடு உறுதி
செய்யப்பட்டுள்ளது. லாய் ட்சிங்தே தனது உரையில் வேண்டுமென்றே வரலாற்றை திரித்துக்கூறி, சர்வதேச ஒழுங்கைச்
சீர்குலைத்து வருகிறார். சீன அரசுரிமை மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டைச்
சீர்குலைத்து, இரண்டாவது உலக போருக்குப் பிந்தைய சர்வதேச ஒழுங்கிற்கு
அச்சுறுத்தலாக அமைந்துள்ள இந்தச் செயல் தோல்வி அடைவது உறுதி என பொது மக்கள் கருத்து
தெரிவிக்கின்றனர்.
வரலாற்றை
மறந்து விடக்கூடாது. வரலாற்றை திரித்து பேசக் கூடாது லாய் ட்சிங்தே எவ்வாறு
கூறினாலும், தைவான், சீனாவின் ஒரு பகுதி என்ற உண்மையை மாற்ற முடியாது. சீன ஒன்றிணைப்பு
என்ற வரலாற்றுப் போக்கினையும் தடுக்க முடியாது.