சென்னை : நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள ‘காந்தா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இப்படம் முதலில் நாளை (செப்டம்பர் 12) வெளியாகவிருந்த நிலையில், தயாரிப்பு நிறுவனமான வேஃபரர் பிலிம்ஸ் மற்றும் ஸ்பிரிட் மீடியாவின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, ரிலீஸ் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதாவது, Way farer Films தயாரிப்பில் வெளியான ‘லோகா’ திரைப்படம் திரையரங்குகளில் இன்னும் சில நாட்கள் திரையிடப்பட வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு விளக்கம் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ”லோகா திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சந்திராவின் இந்த வெற்றி முழக்கம் இன்னும் சில நாள்கள் தொடர்ச்சியாகத் திரையரங்கங்களில் ஒலிக்க வேண்டுமென விரும்புகின்றோம்.
இதன் காரணமாக, காந்தா திரைப்படத்தின் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது, புதிய வெளியீட்டுத்தேதியை விரைவில் அறிவிக்கின்றோம்”” என்று குறிப்பிட்டுள்ளது.
A little delay for a bigger experience
#kaantha
A @SpiritMediaIN and @DQsWayfarerFilm production
#Kaantha #DulquerSalmaan #RanaDaggubati #SpiritMedia #DQsWayfarerfilms #Bhagyashriborse #SelvamaniSelvaraj #Kaanthafilm #Panimalare @dulQuer @RanaDaggubati… pic.twitter.com/lVPguahBnf
— Done Channel (@DoneChannel1) September 11, 2025
முக்கிய கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்த ”காந்தா” படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர். காந்தாவை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார், படத்திற்கு ஜானு சந்தர் இசையமைக்கிறார். காந்தாவின் மற்ற தொழில்நுட்பக் குழுவினர் டானி சான்செஸ்-லோபஸ் ஒளிப்பதிவாளராகவும், லெவ்லின் ஆண்டனி கோன்சால்வேஸ் எடிட்டராகவும் உள்ளனர்.