மீப்பெரு நகரங்களின் மேலாண்மைக்கான வருடாந்திர மாநாட்டின் 2025ஆம் ஆண்டு கூட்டம் 16ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. மேலும் அறிவுசார்ந்த நகரங்கள், மேலும் அருமையான வாழ்வு என்பது நடப்பு கூட்டத்தின் தலைப்பாகும். பன்னாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 200க்கும் அதிகமான நிபுணர்களும் அறிஞர்களும் நகரங்களின் மேலாண்மைப் பணியாளர்களும் இதில் கலந்து கொண்டு மீப்பெரு நகரங்களின் புதிய மேலாண்மை வழிமுறைகள் குறித்து விவாதம் நடத்தினர்.
நகரங்களின் மேலாண்மைக்கு அரசின் ஒருங்கிணைப்பு, பொது மக்களின் பங்கேற்பு மற்றும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு ஆகியவை தேவைப்படும் என்று ஐ.நாவின் பொருளாதாரம் மற்றும் சமூக விவாகர அமைப்பின் பொது நிறுவனங்கள் மற்றும் எண்ணியல் அரசு பிரிவின் தலைவர் ட்சு ஜூவாங் தெரிவித்தார். சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சோ உள்ளிட்ட நகரங்கள் சீனப் பாரம்பரிய விவேகத்தை நகரங்களின் தொடரவல்ல வளர்ச்சியில் ஒன்றிணைத்து வளர்க்கப்பட்டுள்ளன. நகரங்களின் மேலாண்மையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் காணப்பட்டுள்ளன.
உலக நகரங்களின் மேலாண்மையிலுள்ள விவேகங்களைத் திரட்டுவதற்கும் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்துக்கும் சீரான மேடையை இக்கூட்டம் வழங்கியுள்ளதாக சீன மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் கருத்து தெரிவித்தனர்.
