உரிமையாளரின் உயிரை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த வளர்ப்பு நாய்… சீனாவில் நெகிழ்ச்சி சம்பவம்…!!! 

Estimated read time 1 min read

சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டுத் தோட்டத்தில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. மெங் என்ற பெண்ணின் வீட்டில் வளர்த்து வரப்பட்ட ஹெடாவ் என்ற 2 வயது ஷிபா இனு நாய், தனது உரிமையாளரை பாதுகாக்கும் போது விஷப்பாம்பு கடித்து உயிரோடு போராடி மீண்டிருப்பது தான் இது.

ஆகஸ்ட் 29 காலை, மற்றொரு நாய் டுடோடோ ஊளை விட்டதை கேட்டு ஹெடாவ் ஓடி வந்து பார்த்தபோது, ஒரு விஷப்பாம்பு ஷார்ட் டெயில்டு மமுஷி மெங்-வின் அருகே நுழைந்ததை கவனித்தது. உடனே தயக்கமின்றி பாம்பின் மீது பாய்ந்து தாக்கிய ஹெடாவ், உரிமையாளரின் உயிரைக் காப்பாற்றியது.

ஆனால் அந்த அதிர்ஷ்டவசமான தாக்குதலில் ஹெடாவ் பாம்பால் கடிக்கப்பட்டது. உடனே முகம் வீங்கி, உடல் உறைந்து போனதை கண்ட, மெங்-வின் கணவர் ஹெடாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

மருத்துவமனையில் மெங் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஹெடாவுக்கு தண்ணீர் கொடுத்துத் தீவிரமாக பராமரித்து வந்தார். “அது வலி கொண்டு ஒவ்வொரு முறையும் ஒலிக்கும்போது என் கண்கள் கலங்கின,” என்று கூறிய மெங், “அவர் என்னைக் காப்பாற்ற உயிரைக் கூட காயப்படுத்திக் கொண்டது. ஹெடாவ் தற்போது மூன்று வாரங்கள் கழித்து முழுமையாக மீண்டுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரியது.

Please follow and like us:

You May Also Like

More From Author