மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் சிறு குறு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி
எலக்ட்ரானிக்ஸ் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தவும், அத்துறையை ஊக்குவிக்கவும் ரூ. 40,000 கோடி பிரம்மாண்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பயோ-மெடிக்கல் (Bio-Medical) திட்டங்களை ஊக்குவிப்பதற்காக ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
மாநில அரசுகளுடன் இணைந்து 3 பிரத்யேக கெமிக்கல் பூங்காக்கள் உருவாக்கப்படும். கைத்தறி மற்றும் பாரம்பரியத் தொழில்களைப் பாதுகாக்க நாடு முழுவதும் 200 பிரத்யேகப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய மண்டங்களில் ரூ.5000 கோடி முதலீட்டில் என்ன கற்பூரம் மற்றும் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.
கண்டெய்னர்கள் துறையை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு
புதிய தேசிய நீர் வழித்தடங்கள் அமைக்க ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு.
கோவில் நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்
இனி வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்
உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருந்துகள் ஆராய்ச்சி மையம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அமைக்கப்படும்.
3 புதிய ஆயுர்வேத கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டின் பொதிகை மலையில் புதிய மலை ஏற்றத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் புதிய கலாச்சார மையம் அமைக்கப்படும். அது உலக தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்றப்படுவதோடு நாடு முழுவதும் 15 தொல்லியல் துறைகள் சுற்றுலா தளங்களாக மேம்படுத்தப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்.
இதேபோன்று இமாச்சல், உத்தரகாண்ட், ஜம்முவிலும் மலையச்சத் திட்டத்தை ஊக்குவிக்க புதிய திட்டம்.
ஐஐஎம் உதவியுடன் 20 சுற்றுலா தலங்களில் பத்தாயிரம் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.
கடலோரப் பகுதிகளில் தென்னை சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதோடு தென்னை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் பட்டுப்போன தென்னை மரங்களை நீக்கி புதிய மரங்களை நடவும் திட்டம்.
நாடு முழுவதும் மாவட்டம் தோறும் மகளிர் விடுதி அமைக்கப்படும்.
நாடு முழுவதும் 500 நீர்த்தேக்கங்கள் மேம்படுத்தப்படும்..
முந்திரி மற்றும் கோகோ உற்பத்தியை மேம்படுத்த புதிய திட்டம்.
