“பேச்சுவார்த்தையா? இல்ல போரா?”.. அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த ‘ஷாக்’

Estimated read time 0 min read

ஈரான் முன்மொழிந்த அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ள நிலையில், ஈரான் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் காசெம் கரிபாபடி அதிரடியான கருத்தொன்றைத் தெரிவித்துள்ளார்.

இப்போது பந்து அமெரிக்கா பக்கம்தான் இருக்கிறது என்றும், இந்தப் பிரச்சனையைத் தந்திரமாகப் பேசித் தீர்க்கலாமா அல்லது நேருக்கு நேர் மோதிப் பார்க்கலாமா என்பதை அமெரிக்காதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

மேலும், தங்கள் நாட்டைப் பாதுகாக்க எப்பேர்ப்பட்ட கடினமான சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானின் இந்தத் துணிச்சலான பதிலடி, இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author