சீனத் துணை தலைமை அமைச்சர் ஹூலிஃபென் மே 11ஆம் நாளிரவு ஜெனீவாவில் உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குநர் இவேலாவைச் சந்தித்துரையாடினார்.
அப்போது அவர், உலக வர்த்தக அமைப்பை மையமாக கொண்ட பலதரப்பு வர்த்தக அமைப்பு முறை சர்வதேச வர்த்தகத்தின் அடித்தளமாகும் என்று தெரிவித்தார். உலகப் பொருளாதார மேலாண்மையில் முக்கிய பங்களிப்பை ஆற்றி வருகிறது. பல்வேறு தரப்புகள் உலக வர்த்தக அமைப்ப்பின் கட்டுகோப்புக்குள் சமத்துவ பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாடு மற்றும் சர்ச்சைகளைத் தீர்த்து பலதரப்புவாதம் மற்றும் தாராள வர்த்தகத்தைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், உலக வர்த்தக அமைப்பின் சீர்திருத்தத்தில் சீனா தொடர்ந்து பன்முகங்களிலும் ஆழமாகக் கலந்து கொண்டு உலக வர்த்தகத்தை நிலைப்படுத்தி உலக கூட்டு சவால்களைச சமாளிப்பதில் உலக வர்த்தக அமைப்பு பங்களிப்பதற்குச் சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார்.