மேற்கு வங்க SIR வழக்கு: SC-ல் நேரில் ஆஜராகி வாதாட மம்தா விருப்பம்  

Estimated read time 1 min read

மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் ஒரு மனுதாரராக உள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ளார்.
இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வில், இந்த வழக்கை வழக்கறிஞர்கள் இன்றி தானே நேரில் வாதாட மம்தா பானர்ஜி அனுமதி கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவரது சட்டக் குழு மூலம் இடைக்கால மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் கண்ணியம் மற்றும் நடைமுறைகளைத் தான் நன்கு அறிவேன் என்றும், விதிகளை பின்பற்றி வாதாட தயாராக இருப்பதாகவும் மம்தா தனது மனுவில் உறுதி அளித்துள்ளார்.

You May Also Like

More From Author