சீன-இந்திய எல்லைப் பிரச்சினைக்கான 24வது பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 19ஆம் நாள் புது தில்லியில் நடைபெற்றது. சீனத் தரப்பின் சிறப்புப் பிரதிநிதி வாங் யீயும், இந்திய தரப்பின் சிறப்புப் பிரதிநிதி தோவலும் சீன-இந்திய எல்லைப் பிரச்சினை மற்றும் இரு தரப்புறவு குறித்து பயனுள்ள முறையில் கருத்துக்களை பிரமாறிக் கொண்டனர்.
வாங் யீ கூறுகையில், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், தலைமையமைச்சர் மோடி ஆகியோர் கசானில் எட்டிய முக்கிய ஒத்த கருத்து, சீன-இந்திய உறவின் மேம்பாட்டுக்கும் எல்லைப் பிரச்சினையை உரிய முறையில் தீர்ப்பதற்கும் வழிகாட்டியுள்ளது. இவ்வாண்டு துவக்கம் முதல், இரு தரப்புறவு சீரான வளர்ச்சிப் போக்கில் உள்ளது. எல்லை நிலைமை தொடர்ந்து சீராகியுள்ளது என்றார். மேலும் அவர் கூறுகையில், சீன-இந்திய உறவின் சீரான வளர்ச்சி, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்கு பொருந்தியது. இரு தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் ஒன்றுக்கொன்று நம்பிக்கையை அதிகரித்து, பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை விரிவாக்கி, எல்லை மேலாண்மை, எல்லை கோடு பற்றிய பேச்சுவார்த்தை, எல்லை கடந்த பரிமாற்றம் முதலிய துறைகளில் ஒத்தக் கருத்துக்களை அதிகரித்து, மேலதிக ஆக்கப்பூர்வ முன்னேற்றமடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தோவல் கூறுகையில், இந்தியாவும் சீனாவும் கூட்டு சவால்களை எதிர்நோக்கியுள்ளன. பரிந்துணர்வையும் நம்பிக்கையையும் அதிகரித்து, ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், சீனாவுடன் தொடர்பு மற்றும் உரையாடலை நிலைநிறுத்தி, எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பங்காற்ற இந்தியா விரும்புவதாகவும் தெரிவித்தார்.