அமெரிக்கா-ஈரான் இடையே ஓமனில் முக்கிய பேச்சுவார்த்தை: டொனால்டு டிரம்ப் வெளியிட்ட தகவல்  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஓமன் நாட்டில் மிகச் சிறந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் இருந்து புளோரிடா செல்லும் வழியில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
இருப்பினும், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை முடக்கும் வகையில் புதிய தடைகளை விதித்துள்ள அதே வேளையில், அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

You May Also Like

More From Author