அமெரிக்காவில் ஹெலிகாப்டரில் இருந்து லம்போர்கினி கார் மீது பட்டாசு வீசி வெடிக்கச் செய்ததற்காக யூடியூபர் கைது செய்யப்பட்டார்.
அலெக்ஸ் சோய் எனும் யூடியூபர், கடந்த ஆண்டு ஹெலிகாப்டரில் இருந்து லம்போர்கினி காரின் மீது பட்டாசுகளை தூக்கி எறிந்து வெடிக்கச் செய்யும் காட்சிகளை தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார்.
மேலும் உரிய அனுமதியின்றி தரைக்கு அருகில் ஹெலிகாப்டர் பறப்பதும் அந்த வீடியோவில் காணப்பட்டுள்ளது. இதன் காரணமாக கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் அலெக்ஸ் சோய்க்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.