ஒவ்வோராண்டு இறுதியில் நடைபெறும் சீன மத்திய பொருளாதார பணிக் கூட்டம், சீன பொருளாதார வளர்ச்சியை அறிந்து கொள்வதற்கான முக்கிய வழிமுறையாகும்.
இவ்வாண்டு டிசம்பர் 11 12 ஆகிய நாட்களில் இக்கூட்டம் வழக்கம் போன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார்.
2023ஆம் ஆண்டில் சீனாவின் பொருளாதாரம் மீட்சியடைந்தது. நீண்டகால வளர்ச்சிப் போக்கு மாறவில்லை. 2024ஆம் ஆண்டில் சீன பொருளாதார வளர்ச்சியின் முக்கியப் பகுதி, உயர் தர வளர்ச்சியாகும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சீனா பெரிய நாடாக திகழ்கின்றது.
உண்மையான பொருளாதாரத்தை தூணாகக் கொண்டு, நவீனத் தொழில் அமைப்பு முறையை வெகுவிரைவில் கட்டியமைக்க வேண்டும்.
இது ஷி ச்சின்பிங் பொருளாதார சிந்தனையின் முக்கிய அம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.