சீனப் பொருளாதார வளர்ச்சிக்குத் தனியார் நிறுவனங்கள் ஆற்றிய பங்குகள்

 

சீனத் தேசிய சந்தை ஒழுங்குமுறை நிர்வாகம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் ஜூன் இறுதி வரை, நாடு முழுவதிலும் பதிவு செய்யப்பட்ட தனியார் தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை 12.5 கோடியை எட்டி, மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கையில் 66.9 விழுக்காடு வகித்துள்ளது. வேலைவாய்ப்பை நிதானப்படுத்துதல், வளர்ச்சியை மேம்படுத்துதல், மக்களுக்கு நன்மை பயத்தல் ஆகியவற்றில் தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றியுள்ளன. தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் இயக்காற்றலையும் புத்தாக்க ஆற்றலையும் சந்தை கண்காணிப்பு துறை மேலும் வலுப்படுத்தி, உயர்தர வளர்ச்சிக்கு வழிகோலுகினறது.

தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் நீண்டகால வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அவற்றின் வளர்ச்சியை மேம்படுத்துவது மற்றும் பதிவு செய்வது பற்றிய விதிமுறையைச் சீனத் தேசிய சந்தை ஒழுங்குமுறை நிர்வாகம் ஆய்வு செய்து வெளியிடவுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author