முக்கிய பொருளாதாரப் பணிகள் பற்றிய ஷிச்சின்பிங்கின் கட்டுரை ஜியூஷி இதழில் வெளியீடு

2025ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் நாள் நடைபெற்ற மத்திய பொருளாதார பணிக் கூட்டத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி, தற்போதைய பொருளாதாரப் பணியின் முக்கிய அம்சங்கள் என்ற தலைப்பில் பிப்ரவரி 16ஆம் நாள் வெளியாகும் ஜியூஷி இதழில் வெளியிடப்பட உள்ளது.

2026ஆம் ஆண்டிற்கான பொருளாதாரப் பணிகள் அதிகம். இவற்றில் முக்கிய கடமைகளை இறுகப்பற்ற வேண்டும் என்று இக்கட்டுரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டுத் தேவையை முதன்மையாக கொண்டு வலுவான உள்நாட்டு சந்தையை கட்டமைக்க வேண்டும்.

புத்தாக்கத்தை பின்பற்றி புதிய இயக்காற்றலை விரைவாக உருவாக்க வேண்டும். சீர்திருத்தத்தைக் கடைப்பிடித்து உயர்தர வளர்ச்சிக்கான இயக்காற்றல் மற்றும் உயிராற்றலை வலுப்படுத்த வேண்டும். வெளிநாட்டுத் திறப்பில் நிலைத்து நின்று பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றியை முன்னேற்ற வேண்டும்.

ஒருங்கிணைந்த வளர்ச்சியில் ஊன்றி நின்று நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஒருங்கிணைப்பையும் பிரதேச ஒத்துழைப்பையும் ஊக்குவிக்க வேண்டும்.

கார்பன் உச்சநிலை, கார்பன் நடுநிலை ஆகிய இலக்குகளுடன் பன்முக பசுமை மாற்றத்தை முன்னேற்ற வேண்டும். மக்களே முதன்மை என்பதைக் கடைப்பிடித்து பொதுமக்களுக்கு முழுமூச்சுடன் சேவைபுரிய வேண்டும். அடிப்படை நிலைப்பாட்டுடன் முக்கிய துறைகளிலான இடர்களை உகந்த முறையில் ஆக்கப்பூர்வமாக நீக்க வேண்டும் என்று இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author