ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் 32வது அதிகாரப்பூர்வமற்ற கூட்டம்(ஏபெக்)தென் கொரியாவில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, இந்த அமைப்பு செயலகத்தின் இயக்குநர் எட்வர்டோ பெட்ரோசா தென் கொரியாவில் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்த போது, சீன நவீனமயமான வளர்ச்சியின் சாதனைகளை வெகுவாக பாராட்டினார். அவர் கூறுகையில், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கட்டுக்கோப்புக்குள் சீனா வழிக்காட்டியாக பங்காற்றி வருகிறது என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் சேர்ந்தது முதல் இதுவரை, சீனா ஆக்கமுடன் பங்காற்றி வருகிறது. முதற்கட்டத்தில், தனது சொந்த சீர்திருத்தத்தை முன்னேற்றுவதற்கு சீனா முக்கியத்துவம் அளித்தது. இதற்குப் பிறகு, ஆசிய-பசிபிக் பிரதேசம் மற்றும் உலகளவில் மேலும் உயர்நிலை செழுமை நனவாக்கப்படுவதை சீனா முன்னேற்றி வருகிறது.
2014ஆம் ஆண்டு ஏபெக் உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்த சீனா, ஆசிய-பசிபிக் தாராள வர்த்தக மண்டலத்தை உருவாக்குவதற்கான நெறிவரைத்திட்டத்தை வெளியிட்டது. இப்பிரதேசத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
