“கூட்டணி உங்க இஷ்டம்…. ஆனா எம்ஜிஆரையும் அம்மாவையும் இதுல இழுக்காதீங்க” ஓபிஎஸ் கருத்துக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்….!! 

Estimated read time 0 min read

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்களுக்கு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஓபிஎஸ் எந்தக் கூட்டணிக்குச் செல்வது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றாலும், திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அவர் கூறியதை அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தினகரன் கூறியுள்ளார். குறிப்பாக, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆசியுடன் திமுக ஆட்சி அமையும் என்று ஓபிஎஸ் பேசியது, அந்தத் தலைவர்களை அவமதிக்கும் செயல் என அவர் சாடியுள்ளார்.

திமுக என்ற தீய சக்தியை எதிர்ப்பதற்காகவே எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கினார் என்பதையும், கடந்த 50 ஆண்டுகளாக அதிமுகவின் தலைவர்களும் தொண்டர்களும் திமுகவை எதிர்த்துப் போராடி வருவதையும் தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்படிப்பட்ட சூழலில், திமுகவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பேசியிருப்பது அதிமுகவின் தியாகங்களை கொச்சைப்படுத்துவது போல உள்ளதாகவும், இதைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author