இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களை மத்திய புள்ளியியல் அமைச்சகம் இன்று (பிப்ரவரி 27, 2026) வெளியிட்டுள்ளது.
இதன்படி, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியா 7.8% என்ற வலுவான வளர்ச்சியை எட்டியுள்ளது.
டிசம்பர் 31, 2025-டன் முடிந்த மூன்றாவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.8% ஆக உள்ளது.
இது ஆய்வாளர்கள் கணித்த 7% – 8.1% என்ற வரம்பிற்குள் அமைந்துள்ளது.
ஒட்டுமொத்த 2025-26 நிதியாண்டின் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.6% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாகக் கணிக்கப்பட்ட 7.4%-ஐ விட அதிகமாகும்.
முந்தைய இரண்டாவது காலாண்டின் (Q2) வளர்ச்சி விகிதம் 8.2%-லிருந்து 8.4% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
