“வெளியே வர வேண்டாம்!” – போர் மேகங்களால் அதிரும் இஸ்ரேல்.. இந்தியத் தூதரகம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை..!!! 

Estimated read time 1 min read

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் இன்று (பிப். 28, 2026) மிக முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ‘முன்னெச்சரிக்கை தாக்குதல்களை’ (Pre-emptive strikes) நடத்தியுள்ளதைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக, இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் மறு உத்தரவு வரும் வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்கு அருகிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், இஸ்ரேல் அரசின் ‘ஹோம் ஃப்ரண்ட் கமாண்ட்’ (Home Front Command) வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைத் துல்லியமாகப் பின்பற்றுமாறும், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் தூதரகத்தின் 24 மணிநேர உதவி எண்களைத் (+972-54-7520711) தொடர்பு கொள்ளுமாறும் இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author