நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி கால்பந்து அணி சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) டூரண்ட் கோப்பை இறுதிப் போட்டியில் புதிய அணியான டயமண்ட் ஹார்பரை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தொடர்ச்சியாக கோப்பையை வென்ற அணி என்ற சாதனையைப் படைத்தது.
கடந்த 34 ஆண்டுகளில் இந்த சாதனையை எட்டிய முதல் அணி இதுவாகும்.
இதற்கு முன் ஈஸ்ட் பெங்கால் அணி மட்டுமே 1989 மற்றும் 1991 ஆண்டுகளுக்கு இடையில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றது.
முன்னதாக, ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.
முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது. அஷீர் அக்தர் 30வது நிமிடத்திலும், பார்த்திப் கோகோய் 46வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
டூரண்ட் கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக கைப்பற்றியது நார்த்ஈஸ்ட் யுனைடெட்
