சேவை வர்த்தகத்துக்கான 2025ஆம் ஆண்டு சீனச் சர்வதேசப் பொருட்காட்சி நிறைவு பெற்றது பற்றிய செய்தியாளர் கூட்டம் செப்டம்பர் 14ஆம் நாள் நடைபெற்றது.
தற்போது, உலகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக அதிகரிப்புக்கான புதிய இயக்காற்றலாக சேவை வர்த்தகம் திகழ்கிறது. 85 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 500 பெரிய தொழில் நிறுவனங்கள் நடப்புப் பொருட்காட்சியில் கலந்து கொண்டு, 900க்கும் மேலான சாதனைகள் பெறப்பட்டுள்ளன.
தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டு சீனச் சேவை வர்த்தகத்தின் மொத்த மதிப்பு முதன்முறையாக 1 லட்சம் அமெரிக்க டாலரைத் தாண்டி, வரலாற்றில் உச்சநிலையை எட்டியது. இதில், எண்ணியல்மயமாக்கம், நுண்ணறிவுமயமாக்கம், பசுமைமயமாக்கம் ஆகியவற்றின் அறிவு செறிந்த சேவை வர்த்தக தொகை, 2020ஆம் ஆண்டில் இருந்ததை விட 38 விழுக்காடு அதிகமாகும்.
மேலும், சீனாவில் பெரிய அளவிலான சந்தை, அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ளது. இதுவரை, உலகளாவிய முதலாவது பெரிய சரக்கு வர்த்தக நாடாகவும், 2வது பெரிய சேவை வர்த்தக நாடாகவும் சீனா திகழ்கிறது.
நடப்புப் பொருட்காட்சியில், சேவை சந்தையின் திறப்பு அளவையும் சேவை வர்த்தகத்தின் உயர்தர வளர்ச்சியையும் முன்னேற்றுவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை சீனா வெளியிட்டது. இது, அன்னிய தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
சேவை வர்த்தகத்துக்கான சீனச் சர்வதேசப் பொருட்காட்சி, சீனா சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி உள்ளிட்ட பொருட்காட்சிகளின் மூலம், சீனப் பொருளாதார வளர்ச்சியில் புதிய சாதனைகளை உலகம் அறிந்து கொண்டதோடு, உலகத்துடன் கூட்டாக வளர்ச்சியை நாடி, திறப்புத் தன்மை வாய்ந்த உலகப் பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதற்கான சீனாவின் மனவுறுதியையும் உணர்ந்து கொண்டுள்ளது.