சீன தேசிய புள்ளிவிவர பணியகத்தின் சேவைத் தொழில் ஆய்வு மையம், சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் ஆகியவை 4ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, பிப்ரவரியில் சீனாவின் உற்பத்தி துறையில் PMI எனும் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு 49 சதவீதமாக இருந்தது. இது முந்தைய மாதத்தை விட 0.3 சதவீத புள்ளிகள் சரிந்துள்ளது.
பெரிய நிறுவனங்களுக்கான PMI 51.5 சதவீதமாக இருந்தது. முந்தைய மாதத்தை விட 1.2 சதவீத புள்ளிகள் அதிகரித்தது. பெரிய நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் வணிகம் விரிவாக்கத்தை பராமரித்துள்ளதை இது காட்டுகிறது. நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களுக்கான PMI வசந்த விழா விடுமுறையால் பாதிக்கப்பட்டு, முன்பை விட குறைவு காணப்பட்டுள்ளது.
மேலும், உயர் தொழில்நுட்ப உற்பத்தி துறைக்கான PMI 51.5 சதவீதமாகும். இத்துறையில் வளர்ச்சி ஆற்றல் தொடர்ந்து தெளிவாக காணப்பட்டுள்ளது. நுகர்வு பொருட்கள் துறைக்கான PMI முந்தைய மாதத்தை விட 0.5 சதவீத புள்ளிகள் உயர்ந்தது. இத்துறையின் வணிகச் சூழல் மீட்சி அடைந்துள்ளது. உபகரண உற்பத்தி மற்றும் ஆற்றல் நுகர்வு மிகுந்த துறைகளுக்கான PMI குறியீடுகள் முந்தைய மாதத்தை விட முறையே 0.3 மற்றும் 0.1 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளன.
