டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடர் – சாம்பியன் பட்டம் வென்றது கோவை!

Estimated read time 0 min read

டி.என்.பி.எல்.கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மதுரை அணியை வீழ்த்தி கோவை அணி கோப்பையை வென்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்று கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் ஆந்த்ரே சித்தார்த் அதிரடியாக விளையாடி 82 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் கோவை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. மதுரை அணி தரப்பில் சரவணன் 4 விக்கெட்டுகளைக் வீழ்த்தினார்.

பின்னர் விளையாடிய மதுரை பாந்தர்ஸ் அணி தொடக்கம் முதலே தடுமாற தொடங்கியது. கோவை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 14.2 ஓவர்களில் வெறும் 98 ரன்களை மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் கோவை அணி, 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று, சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

You May Also Like

More From Author