சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், போர்ச்சுகல் தலைமையமைச்சர் மொண்டெனேகுரோவுடன் செப்டம்பர் 9ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு, சீன-போர்ச்சுகல் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவு உருவாக்கப்பட்டதன் 20வது ஆண்டு நிறைவாகும். போர்ச்சுகலுடன் நெடுநோக்கு தொடர்பை வலுப்படுத்தி, இரு தரப்புறவின் சரியான திசையை கடைப்பிடித்து, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் மூலம் இரு நாடுகள் மற்றும் உலகச் செழுமை மற்றும் முன்னேற்றத்துக்கு மேலதிக பங்காற்ற சீன விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும், இரு தரப்பும் ஒன்றுக்கொன்று நம்பிக்கை மற்றும் ஆதரவளித்து, புத்தாக்கம், பசுமை, கடல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்புகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும், பண்பாடு, கல்வி, சுற்றுலா, அறிவியல் ஆய்வு, உள்ளிட்ட துறைகளில் பரிமாற்றத்துக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
மொண்டெனேகுரோ கூறுகையில், ஒரே சீனா என்ற கோட்பாட்டை போர்ச்சுகல் தொடர்ந்து பின்பற்றும். மேலும், சீனாவுடன் ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை அதிகரித்து, பொருளாதாரம் மற்றும் வர்த்தக தொடர்பை நெருக்கமாக்கி, எரியாற்றல், நாணயம், சுகாதாரம், நீர் சேமிப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, இரு நாட்டுறவின் வளர்ச்சியை முன்னேற்ற போர்ச்சுகல் விரும்புவதாகவும் தெரிவித்தார்.