மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் நீடித்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு $150-க்கும் மேல் உயரக்கூடும் என்று பொருளாதார நிபுணர் பால் எச்சரித்துள்ளார்.
வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் விநியோகத்தில் நீண்டகாலத் தடை ஏற்பட்டால், அது உலகப் பொருளாதாரத்திற்குச் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, 1973, 1979 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் உலகம் சந்தித்த எரிபொருள் தட்டுப்பாடுகளை விடவும், தற்போதைய சூழலில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிகக் கடுமையானதாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த விநியோக இழப்பு உலக நாடுகளின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியை முடக்கி, விலைவாசியை விண்ணைத் தொட வைக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
