ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சில மாதங்களுக்கு முன், 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), மூன்று பயங்கரவாதிகள் இந்தக் கொலைகளைச் செய்ததில் நேரடியாக ஈடுபட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், பைசரன் பள்ளத்தாக்கு ஒப்பீட்டளவில் வெறிச்சோடி இருக்குமென்பதால், தாக்குதலுக்கு அதைத் தேர்ந்தெடுத்ததாக வட்டாரங்கள் இந்தியா டுடேயிடம் தெரிவித்தன.
ஏப்ரல் 22 அன்று, பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) ஒரு பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் ஃபோர்ஸ் (TRF) இன் மூன்று பயங்கரவாதிகள், பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நுழைந்து 25 சுற்றுலாப் பயணிகளையும் ஒரு உள்ளூர்வாசியையும் சுட்டுக் கொன்றனர்.
பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலுக்காக பைசரன் பள்ளத்தாக்கினை தேர்வு செய்ததன் காரணத்தை வெளியிட்ட NIA
