உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான நீதிபதி சந்திரசூட் நேற்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக பொறுப்பேறக்கவுள்ளார் நீதிபதி சஞ்சீவ் கண்ணா.
திங்கள்கிழமை ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமையில் நடைபெறும் விழாவில், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக (CJI) பதவியேற்க உள்ளார்.
காலை 10 மணிக்குத் திட்டமிடப்பட்ட இந்த விழா, இந்தியாவின் நீதித்துறைக்கு ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.
நீதியரசர் சந்திரசூட் அவரை அரசியலமைப்பு நெறிமுறைகளின்படி முறையாகப் பரிந்துரைத்த ஒரு வாரத்திற்குப் பிறகு, அக்டோபர் 24, 2024 அன்று நீதிபதி கண்ணாவின் நியமனத்தை மத்திய அரசு அறிவித்தது.