எடப்பாடி பழனிசாமிதான் தே.ஜ.கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “என்டிஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் இபிஎஸ்தான்; கூட்டணி ஆட்சி குறித்து இபிஎஸ்தான் முடிவெடுப்பார். தேர்தல் முடிந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவே இறுதியானது. தேசிய ஜனநாயக கூட்டணியில் யாரும் மன வருத்தத்தில் இல்லை, தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் வரும், திமுக ஆட்சியை அகற்றுவதே எங்களின் நோக்கம். பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அடிக்கடி தமிழகம் வருவார்கள்.