லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

Estimated read time 1 min read

லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

துரை செந்தில்குமார் இயக்கத்தில், லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி உள்ள லீடர் திரைப்படம் ஏப்ரல் 3-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலைப்புலி எஸ். தாணு, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், இயக்குநர் பாக்கியராஜ், சித்ரா லட்சுமணன், தனஞ்செயன் உள்ளிட்ட பல முன்னணி சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய லெஜண்ட் சரவணன், உலகெங்கும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள சூழலில், மக்கள் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ இறைவனைப் பிரார்த்திப்பதாக கூறினார்.

மேலும், கடவுள் எந்த உதவியும் நேரடியாகச் செய்ய மாட்டார்; நல்ல மனிதர்கள் மூலம்தான் நல்ல விஷயங்கள் நடக்கும் எனவும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author