சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், நவம்பர் முதல் நாள், பெரும் எகிப்து அருங்காட்சியகம் இயங்க துவங்கியதற்கு எகிப்து அரசுத் தலைவர் சேசிக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
எகிப்து பண்பாட்டு வரலாற்றில் பெரும் எகிப்து அருங்காட்சியகம் ஆழமான பதிவை வழங்கி, பண்டைய எகிப்து நாகரிகத்தைப் பேணிக்காப்பதற்கும் தொடர்வதற்கும் முக்கிய பங்காற்றும் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
சீன-எகிப்து நட்புறவு நீண்டகாலமானது. கடந்த சில ஆண்டுகளில், சீன-எகிப்து பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு செழுமையாக வளர்ந்து வருகின்றது. இரு நாட்டு மக்களின் பரிமாற்றம் சுறுசுறுப்பாக இருக்கின்றது. தற்போது உலக நிலைமை நூற்றாண்டு காணாத நிலையில் மாறி வருகின்றது. சீன-எகிப்து பண்டைய நாடுகள், பரிமாற்றங்களை ஆழமாக்கி, சீன-எகிப்து பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவின் வளர்ச்சிக்கு உந்து சக்தி வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
