சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 27ஆம் நாள் பிற்பகல் மக்கள் மா மண்டபத்தில் சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தலைமையமைச்சர் குனாவர்தனவுடன் சந்திப்பு நடத்தினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், சீன-இலங்கை நட்புறவு நீண்டகால வரலாறுடையது. இரு நாட்டுறவை சீராக வளர்ப்பது, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன் மற்றும் பொது எதிர்பார்ப்புக்குப் பொருந்தியது. இலங்கையுடன் இணைந்து, அரசியல் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தி, எதார்த்தமான ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் உயர் தர கட்டுமானத்தை முன்னேற்றி, இரு நாட்டு நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளியுறவை ஆழமாக்க சீனா விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இலங்கையிலிருந்து தரமான சிறப்புப் பொருட்களை இறக்குமதி செய்வதை சீனா அதிகரிக்கவும், சீனத் தொழில் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்து தொழில் நடத்துவதை ஊக்குவிக்கவும் சீனா விரும்புவதாகவும் தெரிவித்தார்.
குனாவர்தன கூறுகையில், சீனாவுடன் இணைந்து பஞ்ச சீல கோட்பாட்டைப் பரவல் செய்து, இரு நாட்டு நட்புறவை ஆழமாக்கி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டு கட்டுமானத்தை முன்னேற்றி, பொருளாதாரம், வர்த்தகம், கல்வி, சுற்றுலா, வறுமை குறைப்பு உள்ளிட்ட துறைகளிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, சர்வதேச பல தரப்பு தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை நெருக்கமாக்கி, ஆசிய பொது எதிர்கால சமூகம் மற்றும் மனித குலத்துக்கான பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை முன்னேற்ற விரும்புவதாக தெரிவித்தார்.