இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஜனவரி 18ஆம் நாள் கூறுகையில், இந்திய-சீன உறவு இரு நாட்டு வளர்ச்சியின் எதிர்காலம் மற்றும் உலக ஒழுங்குடன் தொடர்புடையது.
ஒன்றுக்கொன்று மதிப்பு மற்றும் நலன் தரும் அடிப்படையில் தொலைநோக்கு பார்வையுடன் சீனாவுடனான உறவை இந்தியா கையாளும் என்றார்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் 21ஆம் நாள் கூறுகையில், சீனாவும் இந்தியாவும் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து ஒத்துழைப்புகளைக் கூட்டாக நாடுவது, இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்கும், தெற்குலக நாடுகளின் வளர்ச்சிப் போக்கிற்கும் பொருந்தியதோடு, பிரதேச மற்றும் உலகத்தின் அமைதி மற்றும் செழுமைக்கும் துணை புரியும்.
இரு தரப்பும் நெடுநோக்கு மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் இரு நாட்டுறவை கையாண்டு, சீன-இந்திய உறவின் இயல்பான மற்றும் சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றும், சர்வதேச விஷயங்களில், இரு தரப்பும் அமைதி சக வாழ்வு பற்றிய 5 கோட்பாடுகளைப் பின்பற்றி, உண்மையான பலதரப்புவாதத்தைச் செயல்படுத்தி, உலகத்தின் நிலைத்தன்மை மற்றும் செழிப்பான வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு மேலும் பெரும் பங்காற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.