சீனாவில் முதலீடு செய்வது பற்றிய கருத்து கணிப்பு

தற்போது நடைபெற்று வரும் 6ஆவது சீன சர்வதேச நுகர்வோர் பொருட்கள் கண்காட்சி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.

இது குறித்து சீன ஊடக குழுமத்தின் சிஜிடிஎன் ஊடகம் உலகளாவிய இணைய பயனாளர்கள் மத்தியில் நடத்திய கருத்துக்கணிப்பில், 85.1 விழுக்காட்டினர் கூறுகையில், “சீனாவுக்குச் செல்வது” மற்றும் “சீனாவில் முதலீடு செய்வது” ஆகியவை தொழில் நிறுவனங்கள் உலக சந்தையில் ஆழமாக ஒருங்கிணைந்து தங்களது உலகளாவிய போட்டியாற்றலை மேம்படுத்துவதற்கான இன்றியமையாத தெரிவுகளாக மாறியுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், நுகர்வோர் பொருட்கள் கண்காட்சி, உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பரிமாற்றம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளுக்கான பரந்த தளத்தை வழங்குவதாக 91.1 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக சீனா இந்த கண்காட்சியைத் தொடர்ந்து நடத்துவது, உயர்மட்ட திறப்பு கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் சீனாவின் மனஉறுதியை வெளிப்படுத்துவதோடு, உலகப் பொருளாதாரத்தின் மந்தமான மீட்சிக்கு தொடர்ச்சியான இயக்காற்றலை செலுத்துவதாக 89.3 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author