2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இப்போது இருந்தே தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இதில் பிரபல நடிகரான விஜய் என்பவர் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். தற்போது இரண்டாவது மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளார்.
அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைக்குமா அல்லது தனியாக தேர்தலை சந்திக்குமா என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வருகிற தேர்தலில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என அந்த கட்சியினர் நகரின் பல முக்கிய இடங்களில் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
அதில் 2026 இல் மக்கள் விரும்பும் முதல்வராக பதவி ஏற்க இருக்கும் எங்கள் தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றி தலைவர் விஜய் அவர்களே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அழைக்கிறோம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் நமது கழகத்தின் வெற்றிவாகையை முக்கடல் சங்கமிக்கும் குமரிலிருந்து ஆரம்பமாகட்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                







 
                                     
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                