ஆகஸ்ட் 10ம் நாள் மாலை 4 மணி வரை, 2025ம் ஆண்டின் கோடைக்கால விடுமுறை காலத்தில்(ஜுன் திங்கள் முதல் ஆகஸ்ட் திங்கள் வரை)திரைப்படங்களின் மொத்த வசூல், 850 கோடி யுவானைத் தாண்டியுள்ளது என்று இணையத் தரவுகள் காட்டுகின்றன.
இவ்வாண்டு, சீன மக்கள் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்ற 80வது ஆண்டு நிறைவாகும்.
எதிர்ப்பு போரின் வரலாற்றை பதிவு செய்து, போராட்ட எழுச்சியைத் தொடர்ந்து வெளிகொணரும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி படைப்புகள் முறையே ஒளிப்பரப்பப்பட்டு வருகின்றன. இவற்றைத் தவிர, கோடைக்கால விடுமுறையில் கார்டூன், நகைச்சுவை முதலிய கருப்பொருள் கொண்ட திரைப்படங்களும் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.
படம்:VCG