இணையப் பாதுகாப்பு சட்டத்தின் திருத்த வரைவு மீது சீனா கவனம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் இணையப் பாதுகாப்பு சட்டத்தின் திருத்த வரைவு குறித்து சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஏப்ரல் 20ம் நாள் கருத்து தெரிவித்தார்.

அவர் கூறுகையில், இணையப் பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலி பாதுகாப்பு என்ற சாக்குபோக்கில், இணையப் பாதுகாப்புக் கவலைக்குரிய நாடுகள், உயர் அபாயமுடைய விநியோக வணிகர்கள் ஆகிய பெயர் பட்டியல்கள் இந்த சட்ட வரைவில் நிர்ணயிக்கப்பட்டன. எரியாற்றல், போக்குவரத்து, தகவல் தொடர்பு தொழில் நுட்பம் முதலிய 18 துறைகளில், மேற்கூறிய பட்டில்களில் இடம் பெறும் நாடுகளும், வணிகர்களும், ஐரோப்பிய ஒன்றிய முழு விநியோகச் சங்கிலியிலிருந்து நீக்கப்படும். இது, பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சினையை, அரசியல்மயமாக்கி, பாதுகாப்பு வரம்புக்குப் புறம்பாக மேற்கொள்ளும் நடவடிக்கையாகும் என்று தெரிவித்தார்.

இதன் திருத்த போக்கை சீனா உற்று கவனித்து வருகிறது என்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்பை மேற்கொள்ள சீனா விரும்புவதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

More From Author