ஆகஸ்ட் 27ம் நாள் மாலை நடைபெற்ற சீன வணிகத் துறை அமைச்சகத்தின் கூட்டம் ஒன்றில், உயர் தரத்துடன், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் தலைமையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய முதலீடு மற்றும் ஒத்துழைப்பு அளவு விரிவடைந்து வருகிறது. உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி ஒத்துழைப்பும் ஆழமாகி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இவ்வாண்டின் ஜுலை திங்கள் வரை, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மற்ற உறுப்பு நாடுகளின் மீது சீனாவின் முதலீட்டுத் தொகை, 8400 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. எண்ணெய், இயற்கைவாயு, கனிம வளம், பதனிடுதல், தயாரிப்பு, அடிப்படை வசதிகளின் கட்டுமானம் முதலியவை முதல், எண்ணியல் பொருளாதாரம், பசுமை வளர்ச்சி உள்ளிட்ட புதிய துறைகள் வரை, பல்வகை ஒத்துழைப்புகள் விரிவாக்கப்பட்டுள்ளன என்றும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.