ஹுவாங்யான் தீவுக்கு அருகிலுள்ள கடல் எல்லைக் கோடுகள் பற்றிய அறிக்கை ஒன்றை சீன மக்கள் குடியரசு நவம்பர் 10ஆம் நாள் வெளியிட்டது.
அதேநாள், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்த அறிக்கை வெளியீடு குறித்து செய்தியாளருக்கு பதில் அளித்தார்.
ஹுவாங்யான் தீவு, சீனாவின் உரிமைப் பிரதேசத்தின் ஒன்றாகும். கடல் சட்டம் பற்றிய ஐ.நா. ஒப்பந்தம், எல்லையோரக் கடல் மற்றும் அருகிலுள்ள மண்டலம் பற்றிய சீன மக்கள் குடியரசின் சட்டம் ஆகியவற்றுக்கு இணங்க, சீன அரசு ஹுவாங்யான் தீவுக்கு அருகிலுள்ள கடல் எல்லைக் கோடுகளை வரைந்து வெளியிட்டது.
இது, சீன அரசு சட்டப்படியே கடல் மேலாண்மையை வலுப்படுத்துவதற்கான இயல்பான நடவடிக்கையாகும். இது, சர்வதேச சட்டத்துக்கும் பொதுவான நடைமுறைக்கும் பொருத்தமானது என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கடல்சார் மண்டல சட்டத்தில், சீனாவின் ஹுவாங்யான் தீவு, நன்ஷா தீவுக்கூட்டங்களின் பெரும்பாலான பகுதிகள், தொடர்புடைய கடற்பரப்பு ஆகியவை தனது கடல் பகுதியில் சேர்க்க பிலிப்பைன்ஸ் முயல்கிறது. தென் சீன கடலில் சீனாவின் இறையாண்மையை கடுமையாக மீறியுள்ள பிலிப்பைன்ஸின் செயலை சீனா உறுதியாக எதிர்க்கிறது. நாட்டின் இறையாண்மை மற்றும் கடல் உரிமையைப் பேணிக்காக்கும் வகையில், சீனா தொடர்ந்து சட்டப்பூர்வமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.