நாம் ஏழு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால், அது காலப்போக்கில் உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் வருடாந்திர அறிவியல் அமர்வில் தங்கள் சமீபத்திய கண்டுபிடிப்புகளை முன்வைத்த ஆராய்ச்சியாளர்கள், முந்தைய ஆய்வுகள் குறைவான தூக்கத்தினால் உயர் இரத்த அழுத்தம் வரலாம் என்று கூறி இருந்தாலும், அதற்கான சான்றுகள் இதுவரை சரியாக கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
உயர் இரத்த அழுத்தம் இல்லாத ஆறு நாடுகளைச் சேர்ந்த 10,44,035 பேரின் உயர் இரத்த அழுத்தத்தை மதிப்பீடு செய்ததன் மூலம் இந்த ஆய்வின் முடிவுகள் கிடைத்துள்ளன.