ஹாங்காங்கில் உற்பத்தி மதிப்பு 5.9% அதிகரிப்பு

Estimated read time 1 min read

 

சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசு 5ம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் காலாண்டில் ஹாங்காங்கின் மொத்த உற்பத்தி மதிப்பு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.9 விழுக்காடான சாரம்ச ரீதியான வளர்ச்சி அடைந்துள்ளது. காலாண்டின் அதிகரிப்பு வேகம், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவில் புதிய உச்சத்தை எட்டியது என்று தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், முதலாவது காலாண்டில், ஹாங்காங்கின் பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொடர்பான மின்னணு பொருட்களுக்கான அதிக தேவை, ஹாங்காங்கிற்கு சுற்றுலா பயண அதிகரிப்பு, நாடு கடந்த சுறுசுறுப்பான நிதி நடவடிக்கைகள் ஆகிய காரணங்களால், ஹாங்காங்கின் பொருளாதார எதிர்பார்ப்பு நன்றாக உள்ளது. இதற்கிடையில் மத்திய கிழக்கு பிரதேசத்தின் தொடர் பதற்ற நிலைமை, பொருளாதாரப் போக்கிற்கு ஏற்படுத்தும் அபாயங்களைச் சமாளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொடர்புடைய தொழில்களுக்கான பாதிப்பைக் குறைக்கும் விதம், நிலையான எரியாற்றல் விநியோகத்துக்கு ஹாங்காங் அரசு உத்தரவாதம் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author