டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இந்திய கிரிக்கெட் அணியுடன் பயிற்சியாளர்களும் செல்ல உள்ளனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் 22 அன்று ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இதனால், நவம்பர் 8 முதல் தென்னாப்பிரிக்காவில் நடக்க உள்ள நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணிக்கு இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் விவிஎஸ் லட்சுமணன் செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
விவிஎஸ் லட்சுமணன் இதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணங்களின்போதும் இதேபோல் பொறுப்பு வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய டி20 அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன்?
