“11,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்பு” இந்திய ரயில்வேயில் மெகா அறிவிப்பு….

Estimated read time 1 min read

மத்திய அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்திய ரயில்வே துறை ஒரு மிகப்பெரிய நற்செய்தியை வெளியிட்டுள்ளது. ரயில்வே துறையில் காலியாக உள்ள 11,172 அசிஸ்டெண்ட் லோகோ பைலட் (Assistant Loco Pilot – ALP) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

ITI, டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் டிகிரி (Degree in Engineering) முடித்த, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மெகா வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் வரும் ஜூன் 14 வரை www.rrbchennai.gov.in என்ற சென்னை ஆர்ஆர்பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் நபர்கள் முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam), முதன்மைத் தேர்வு (Main Exam) மற்றும் கணினி வழி ஆப்டிடியூட் டெஸ்ட் (Computer Based Aptitude Test) ஆகிய மூன்று கட்ட கடுமையான தேர்வுகள் மூலமாகத் தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்று ரயில்வே வாரியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author