கேரளாவில் 10 வருடங்களுக்குப் பிறகு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 102 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.
கேரளாவில் உள்ள மொத்த 140 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்றதால் 10 வருஷங்களுக்கு பிறகு அந்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் புதிய முதல்வராக வீ.டி. சதீஷன் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இன்று அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கேரளாவின் முதல்வராக அதிகாரப்பூர்வமாக சதீஷன் பொறுப்பேற்ற நிலையில் அவருடன் ரமேஷ் சென்னிதலா, முரளிதரன் உள்ளிட்ட 20 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர். மேலும் இந்த விழாவில் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், பாஜக தலைவர்கள் உள்ளிட்ட பல அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
