ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேஆஃப் வாய்ப்பு பறிபோனது!  

Estimated read time 0 min read

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரின் தங்களின் கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி மிகப்பெரிய தோல்வியைத் தழுவியுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வியாழக்கிழமை (மே 21) நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த இமாலய வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் வருவது உறுதியாகியுள்ளது.
அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை முற்றிலும் இழந்து நடப்புத் தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.

You May Also Like

More From Author